பௌத்த மதத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய சட்டங்களைக் கொண்டு வரப்படவுள்ளதாக புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சரான பிரதமர் டி.எம் ஜெயரத்ன தெரிவித்துள்ளர்.
பௌத்த நெறியினைப் பாதுகாத்தல் மற்றும் பரப்பும் நடவடிக்கைகளுக்காக புதிதாக ஆறு சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2 ஆயிரத்து 500 வருடங்களுக்கும் மேலாக பௌத்த மதத்தினைப் பாதுகாத்து வரும் மதகுருமார்களையும் இந்த நிகழ்வின் போது பிரதமர் பாராட்டியுள்ளார்.
No comments:
Post a Comment