யானைகளின் கணக்கெடுப்பிற்காக மூடப்பட்டிருந்த தேசிய சரணாலயங்கள் மீளத் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முதலாவது யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகியது.
தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற யானைகளின் கணக்கெடுப்பு நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனை அடுத்து இன்றைய தினம் தேசிய சரணாலயங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நிறைவடைந்த கணிப்பீட்டின்படி நாட்டில் 5 ஆயிரத்திற்கும் 6 ஆயிரத்திற்கும் இடையிலான யானைகள் நாட்டில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த யானைகளின் கணக்கெடுப்பானது, நாட்டிலுள்ள மொத்த யானைகளின் துல்லியமான கணக்கெடுப்பாக அமைய வில்லை என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கணிப்பீட்டு நடவடிக்கை மூலம் நாட்டிலுள்ள யானைகளை அதன் பருவங்;கள் மற்றும் பால் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவற்கே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment