நாட்டில் புதுவித அச்சத்தினை உருவாக்கியிருக்கு மர்ம மனிதர்கள் என்ற பீதி கட்டுக்கதையென என அமைச்சரவைப் பேச்சாளாரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொள்ளையர்களே இவ்வாறு மர்ம மனிதர்கள் போன்ற சுலோகத்துடன் மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மர்ம மனிதர்கள் என்ற புதிய சர்ச்சையால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களுள் நால்வர் பொதுமக்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பீதியைப் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தைக் கையிலெடுப்பதற்கு நீதித்துறையைச் சாராத எவருக்கும ;அதிகாரம் கிடையாது எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment