Saturday, August 27, 2011

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் இனவாதம் அகல வேண்டும்


இலங்கையில் சிங்கள இனவாதம் தலைதூக்கியுள்ளதாலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதமே இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் சமாதான செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய இனவாதமற்ற அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் உள்ளனர்.

எனினும் அவர்களால் இனவாதமற்ற அரசியலுக்கு திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு அரசாஙகத்தின் செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்;நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தவறு காண்பது பொருத்தமற்ற விடயம் எனவும் இலங்கையின் இனப்பிரச்சினைக்காக தீர்வினைக் காண்பதற்கு சிங்கள இனவாதமே தடையாக உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்;.

No comments:

Post a Comment