யாழ். அரியாலை நாவலடிப் பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி இன்றைய தினம் வழங்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் எம்மிடம் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளின் அத்திபாரத்தின் ஆழம் குறைக்கப்பட்டமையினால் இந்த திட்டத்தனை இடைநிறுத்துவதற்கு தான் உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 150 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியாலை நாவலடிப் பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளுகு;கான அத்திபாரத்தின் ஆழம் 900 மில்லி மீற்றராக நிர்ணயிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
எனினும் 750 தொடக்கம் 770 மில்லி மீற்றர் வரையில் இந்த வீடுகளுக்கான அத்திபாரம் நிர்மானிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதால் இடைநிறுத்த வேண்டியேற்றபட்டதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட பொறியியல் குழுவினரால் இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட போதே இந்த விடயம் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment