Friday, August 26, 2011

அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படும்



அரசாங்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் அதேகாலத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளும் இடம் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு மாற்றீடாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதே இந்த கருத்துக்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த  உதவும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்;கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment