Sunday, August 21, 2011

இலங்கையின் எண்ணெய் வளத்தினை சூரையாட நோர்வே முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு.


இலங்கையின் எண்ணெய் வளத்தில் பங்கு கேட்பதற்கு நோர்வே முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்திளை சூரையாடி வருகின்ற நிலையில் நோர்வே இலங்கையின் எண்ணெய் வளத்தைக் குறிவைக்க முயற்சிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எண்ணெய் வளத்தினை இலக்கு வைத்தே நோர்வே அரசாங்கம் இலங்கையின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment