அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு லஞ்ச எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த லஞ்ச எதிர்ப்பு அமைப்பானது, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹெந்துன்னெத்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் இயங்கவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
அரச துறைகளில் இடம்பெறும்; மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் இந்த அமைப்பிற்கு மக்கள் அறியப்படு;த்த முடியும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் அங்குராப்பண வைபவம் நாளை மறுதினம் பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு நூலக ஆவணாக்கல் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment