Sunday, August 14, 2011

அழகு சாதனப் பொருட்கள் மீது புதிய நடைமுறை


அழகு சாதனப் பொருட்களை வியாபாரம் செய்வது தொடர்பில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் அழகுசாதனப் பொருள் அதிகாரசபையின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை  கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அழகு சாதனப் பொருட்கள் மீது தேடுதல் மேற்கொள்வதற்கு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அழகு சாதனப் பொருள் அதிகார சபையின் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த பனராகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுதொடர்பில் அதிகார சபைக்கு அறிவிக்கும் பொருட்டு விசேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

0112 695 173  மற்றும் 0112 698 896  ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் இது தொடர்பில் அறிவிக்க முடியும்.

No comments:

Post a Comment