Tuesday, August 16, 2011

இலங்கையின் இறைமையினைப் பாதுகாப்பது இந்தியாவி;ன கடமை - அசோக் கே. காந்தா.


யுத்தத்தின் பின்னரான இலங்கையில் தூய்மையான அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என இந்திய உயரிஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலவும் அமைதியான சூழலை சாதகமாகப் பயன்படுத்தி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நல்லாட்சியினை ஏற்படுத்தும் பொருட்டு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

வடக்கிலுள்ள தமிழ் மக்களின பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை வழங்குவதற்கு இலங்கை அரசாஙம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இன, மத, மொழி ரீதியான வேறுபாடுகளை அணுசரித்து ஜனநாயக பொறுப்புணர்வுச்சியினை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பிளவு படாத இலங்கையினை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி புரியும் எனவும் இந்திய உயரிஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையினைப் பாதுகாத்து நிரந்த சமாதான பூமியாக மிளிரச் செய்வதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என இதன் போது உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment