வவுனியா நகர சபைக்கு சொந்தமான குமரன்காட்டுப் பகுதியில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வருவதாக வெளியான செய்தி அடிப்படையற்றது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிஷாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட குறித்த பகுதியில் கலாச்சார மண்டபம் ஒன்றும் சந்தைத் தொகுதி ஒன்றுமே நிர்மானிக்கப்பட்டு வருவதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய குறித்த காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது எனவும் முன்னர் அந்த காணியின் ஒரு பகுதி முஸ்லிம்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு முஸ்லீம்களால் வழங்கப்பட்ட காணிக்காக அப்போதிருந்த இந்து மத பெரியார்கள் நன்றிக் கடிதம் ஒன்றினையும் வழங்கியிருந்ததாகவும்
தற்போது அந்த கடிதம் சம்பந்தப்பட்டவர்களிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு கோவிலுக்கு வழங்கப்பட்ட கணியில்தான் தற்போது கலாசார நிலையமும் கடைத் தொகுதியும் நிர்மானிக்கப்படவுள்ளது.
இந்த காணி நகரசபைக்கோ , மையவாடிக்கோ சொந்தமானது அல்ல எனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
எனினும் 21 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீள் குடியேறி வருவதால் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறது.
பட்டானிசூர் காணியில் கட்டடம் கட்ட ஆரம்பத்தில் வவுனியா நகர சபையில் அனுமதி கோரப்பட்டதாகவும் தற்போது அது மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த காணிப்பிரச்சினைக்கு தமிழர்ளையும் , முஸ்லிம்களையும் கொண்ட குழுவொன்றை அமைத்து அதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிஷாட் பதியுதின்; உறுதியளித்தார்.
No comments:
Post a Comment