Thursday, August 18, 2011

புலம்பெய் தமிழர்கள் இலய்கையில் பிரிவினைவாதத்தினைத் தோற்றுவிக்கின்றனர்.


இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினை இலக்கு வைத்தே காணப்படுகின்றன எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை - ஜென்ரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கருத்துக்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் உதவி எமக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

அவற்றினனை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து  தகைமையும் அரசாங்த்திடம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு சக்திகளால் கூட தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டிருப்பதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment