பஸ்களில் யாசகம் பெறுபவர்களுக்கெதிராக உருவாக்கப்ட்ட சட்டமூலம் பெயரளவிலேயே காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாசகர்களால் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சில யாசகர்கள் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களை அச்;சுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய பஸ்களில் யாசகம் எடுப்பதை தடை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலமான வேண்டுகோளினை முன்வைத்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள
No comments:
Post a Comment