இலங்கை மீது சர்வதேச ரீதியில் எழுந்துள்ள அழுத்தங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அவசாரகால சட்டம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளித்தாலும் அதனை நடைமுறை ரீதியில் சாத்தியப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை மக்களுக்கு அனுபவிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதே நாட்டில் சுதந்திரம் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்து;ளளார்.
சர்வதேச ரீதியில் இலங்கை மீது எழுந்துள்ள அபகீர்த்தியினை நீக்குவதற்கு கிடைக்கப்பெற்ற சிறந்த சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்,
இதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பில் நன்மதிப்பினை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment