Friday, August 26, 2011

இரு தடுப்பு_சிகளுக்கு தற்காலிக தடை



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள இரண்டு உயிர் கொல்லி நோய்தடுப்பூசிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இந்த மருந்தினை உட்செலுத்தியதால் உயிரிழ்துள்ளதார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றுமொரு நோயாளிக்கு மேலும் நோய் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டதுள்ளது.

இதனை அடுத்தே குறித்த இரு நோய்த்தடுப்பூசிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Cefuroxime" 750 mg (பதிவிலக்கம்Ep 735) மற்றும் "Amoxacyllin Clavunic" Acid 1.25 g  (பதிவிலக்கம் 2263444 மற்றும் 2278449)  ஆகிய தடுப்பூசிகளுக்கே இந்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நோய்த்தடுப்பூசிகளின் மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்காக தேசிய மருந்து தர உத்தரவாத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இரு மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தும் ஏனைய வைத்தியசாலைகளில் இந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கத் தலைவர் சமன் ரட்னப்பிரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் தராதரங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment