Monday, August 29, 2011

பயங்கரவாதத் தடை சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள வலியுறுத்தல்.


தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வரும் எந்த சட்டத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தினை நீக்கியுள்ள அரசாங்கம் அந்த சட்டத்திற்கு இணையான சட்டங்களை நீக்கவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்குவதன் மூலமே இலங்கையில் சுமுகமான நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதால் மாத்திரம் இலங்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூல ஒப்புதல் வழங்கினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையேல் பேச்சுகளை மீண்டும் தொடர்வதில் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர் தெரிவித்து;ளளார்.

No comments:

Post a Comment