லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆபிரிக்கா நாடுகளிலிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்;திக் கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் மஞ்சள் காய்ச்சல் நோய் விரைவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரு தேசங்களில் இருந்தே இலங்கைக்கு மஞ்சள் காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயினைப் பரப்பும் அதே நுளம்பினாலே மஞ்சள் காய்ச்சல் நோயும் பரப்பட்டு வருதாக அந்த திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பவுள்ளவர்கள் தங்களை உடற்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும்,
தற்போது நாடு திரும்பியுள்ளவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ சோதனை நிலையத்தில் தம்மை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதார திணைக்களம் அறிவுறித்தியுள்ளது.
No comments:
Post a Comment