Saturday, August 27, 2011

நெடுந்தீவில் மனித எச்சங்கள் மீட்பு


நெடுந்தீவு உதவி அரச அதிபர் காரியாலயத்திற்கு அருகில் ஒரு தொகுதி மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மண்டை ஓடுகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.

உதவி அரச அதிபர் காரியாலயத்திற்கு அருகில் அத்திபாரம் போடுவதற்காக நிலத்தினைத் தோண்டிய போதே இந்த 8 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த நிலத்தில் இருந்து மனித எலும்புக்கூட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அத்திபாரம் வெட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.



No comments:

Post a Comment