நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 சட்டவிரோத வானொலி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றுள் கிழக்கு மாகாணத்தில் இருந்து நான்கு வானொலி நிலையங்களும் வட மேல் மாகாணத்தில் இருந்து 3 வானொலி நிலையங்களும் ஏனைய பகுதியில் இருந்து ஒரு வானொலி நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானொலி நிலையங்களுக்கான ஒலி பரப்புக் கருவிகள் கிடைக்கப்பட்ட விதம் குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வானொலி நிலையம் ஒன்றின் ஒலி பரப்புக் கருவி அரச வானொலி நிறுவனத்திற்கு சொந்தமானது என விசாரணகைளில் இருந்து தெரிய வந்து;ளது.
No comments:
Post a Comment