சாரதி அனுமதிப் பத்திரத்தினை ரத்துச் செய்யும் அதிகாரம் போக்குவரத்துப் பிரிவு சாரா பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக ;கட்டுப்படு;த்தும் பொருட்டே சாதாரண பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கான நகல் வரைவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாதசாரி ஒழுங்குகள் மற்றும் வீதி ஒழுங்குகள் மீறப்படுவதனாலேயே இலங்கையில் பெரும்பாலான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
விபத்துக்களால் சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை வாராந்தம் 200 ற்கும் 300 ற்கும் இடைப்பட்டுக் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் மாத்திரம் விபத்துச் சம்பவங்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 47; ஆகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவின் அதிகாரியான பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாகன மற்றும் வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சாரதிகள் வாகன ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment