புலம்பெயர் தமிழர்களுக்கு தமது சமூக அக்கறை கிடையாது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.
இளவயதுக் கருக்கலைப்பு பாரியளவில் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கலாசர சீர்கேடுகளுக்கு புலம் பெயர் தமிழர்களின் வீடுகளே பயன்படுத்தப்படுகின்றன.
யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விடுதிகள் புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமானவை,
அவர்களுக்கு பணம் மாத்திரமே தேவையாக உள்ளது. எனவே தமது வீடுகளை விடுதிகளாகப் பயன்படுத்துவற்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை எனவும் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment