Monday, August 22, 2011

மக்களது தாக்குதலைக் கட்டுப்படுத்த இராணுவத்திற்கு பயிற்சி


கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அவரச நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இராணுவத்தினருக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மோதல்களை அடுத்து இந்த விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திடீரென நடத்தப்படும் கல்லெறித் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, ஆத்திரமுற்ற மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன தொடர்பில் இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கலவரத்தில் ஈடுபடுபவர்களுகள் மீது தாக்குதல் மேற்கொள்ள இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிண்ணியாவில் கடற்படையினர் முகாமை கடந்த வாரம் பொதுமக்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு இராணுவத்தின் புதிய பிரிவு ஒன்று தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment