Sunday, August 28, 2011

ஆன்மீக உற்சவத்தில் 40 லட்டசம் பெறுமதியான நகைகள் கொள்ளை


நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் 20 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆயல வீதியில் கந்தனின் தேர் பவனி வந்தபோது சன நெரிசலைப் பயன்படுத்தி 20 லட்சம் ரூபா பெறுமதியான 40 பவுண் நகைகள்; திருடப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு இரு பெண்களையும் சில இளைஞர்களையும் யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில்  பத்து முறைப்பாடுகள் யாழ் பொலிஸிலாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து;

இவற்றுள் அநேகமான திருட்டு சம்பவங்கள் கால் கழுவும் பகுதிகளிலும் ஆலய உள் வீதியிலுமே இடம்பெற்றிருப்பதாகத் விசாரணைகளில் இருந்து தெரிவிய வந்துள்ளது.


திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment