தேசிய போக்குவரத்தில் மோட்டார் சைக்கிள் போக்குவரத்திற்கென விசேட பாதை ஒழுங்கு ஏற்படுத்தப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சபையின் தலைவர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்துள்ளார்.
இதன்படி பாதனியவில் இருந்து அனுராதபுரம் வரையில் மோட்டார் போக்குவரத்திற்கென விசேட ஒழுங்கு அமைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் கனிசமான வீதி விபத்துக்களைக் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பிரேமசிரி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment