இலங்கையில் பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பலமான எதிர்க்கட்சியினால் மாத்திரமே நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வாழ்க்கை சரிதப் புத்தக வெளியீட்டு வைபவம் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் போராடி வருவதாகஇதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சி ஆகியவை கீழ்தரமான அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment