Sunday, August 28, 2011

இராணுவத்தினர் மீது தாக்குதல் Nமுற்கொள்பவர்களை இனங்காண விமானப் படையினர் சேவை பெறப்பட்டுள்ளது


நாட்டில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கி வரும் கிறீஸ் மனித வன்முறைகளில் ஈடுபடுபவர்களை இனங்காண விமானப் படையினரின் சேவை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விமானப் படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேறகொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறீஸ் மனிதர்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் பொதுமக்களை விமானப் படையினர் கைது செய்வதற்கு இந்த ஏற்பாடு உதவும் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment