நாவாற்துறையில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுNருஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நாவற்துறை மக்களை; நேரடியாகச் சென்று சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர்;களின் சம்மதத்துடனே உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினைத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை தீவிரவாதிகள் என்று இராணுவத் தளபதி விபரித்து இருக்கும் போது இராணுவத்தினரே இந்த தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்தேக நபர்களுக்குப் இராணுவம் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் இராணுவம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனை விடுத்து அப்பாவி மக்கள் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment