இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி தற்போது உயிருடன் இருந்திருந்தால் இதனையே செய்திருப்பார் எனக் குறிப்பிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வின் கருணாநிதி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இதேவேளை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது மனிதாபிமான மற்ற செயல் என தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே இறந்து விட்டனர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் இவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறு பரிசீலித்து அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எப்போதும் எதிர்க்கும் என்பதாக அக்கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment