புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
புத்தளத்தில் மர்ம மனிதர் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற பதற்ற நிலையினை அடுத்து பொலிஸாருக்கு பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து புத்தளத்தில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.
இதேவேளை மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது சிறுவன் ஒருவரும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment