இந்தியாவின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷமா சுவராஜ் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பினை ஏற்று இலங்கை வரவுள்ள இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் 5 நாள் தங்கியிருக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக்குழு ஒன்று விஜயம் செய்யவுள்ளதாகவும்,
இந்த நாடாளுமன்றக் குழு தமிழக உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடாளுமன்றக் குழு இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளை சந்திக்கவுள்ளதாகவும் வட பகுதிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான பணிகளுக்கு இந்தியா முன்னுரிமை வழங்கி செயற்படவுள்ளதாகம் அதற்காக இலங்கையின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இந்த நாடாளுமன்ற குழுவின் விஜயம் அமையும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment