வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச மீதான தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாதிவெல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் விசாரணைககளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
பொரலெஸ்கமுவவிலுள்ள தனது வீட்டுக்கு அலுவலகத்திலிருந்து சென்று கொண்டிருந்த போது வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச நேற்றிரவு 7.30 அளவில் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment