தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து அறவிட திட்டமிட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் இதுவரையில் 41 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் தரம் குறைந்த பெற்றோல் சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள நட்டத்தை தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து அறவிடவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தில் தேங்கியுள்ள தரம் குறைந்த பெற்றோலை சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் அதனை நெப்டா எரிபொருளாக மாற்றி, இலங்கை மின்சாரசபைக்கு வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை தரம் குறைந்த பெற்றோலை தாம்; வழங்கவில்லை எனவும் அதனால் ஏற்பட்ட நட்டத்தை பொறுப்பேற்க முடியாது எனவும் குறித்த சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment