நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கென இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய கல்விக் கொள்கை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதுடன், 2012 ஆம் கல்வியாண்டு முதல் புதிய கொள்கையை அமுல்படுத்பத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டம், பரீட்சைகள், ஆசிரியர் கைநூல், பரீட்சை மதிப்பீடுகள், ஆசிரியர் இடமாற்றம், ஆசிரியர் நியமனம், போன்றவற்றில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதுடன்,
தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், தரம் ஒன்றிற்கான அனுமதி, புலமைப் பரிசில், உயர்தரம், ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் கல்வித்துறை தற்போது எதிர்நோக்கி வரும் சகல பிரச்சினைகளுக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஊடாக தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கல்வி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து கடந்த ஜனவரி மாதம் முதல் கல்வி மறுசீரமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு 24 தடவைகள் கூடி ஆய்வு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment