“இளைஞர்களின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் இச்சீர்கேட்டுக்கு காரணம்தான்” என்று விபரிக்கிறார் குருவிட்ட பிரதேசசபைத் தவிசாளர்
மன்னர்களின் குளியல் தடாகமாக அன்று இருந்த போபத் எல்ல கழிவுகள் கொட்டுமிடமாக மாறிட்டதோ என்ன?
இந்தஉளக்குமுறல்களுக்கு குறைவே இல்லை அவ்வூர் மூத்த சந்ததியினருக்கு!
இலங்கையின் அதிகமான நீர்வீழ்ச்சிகள் கொண்ட இரத்தினபரி மாவட்டத்திலேயே இந்நீர்வீழ்ச்சியும் காணப்படுகின்றது. சுமார் 90 நீர் வீழ்ச்சிகள் இங்கு காணப்படுவதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை அடையாளப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மிக அதிகமான நீரிணை ஆண்டு தோரும் கடலுக்கு எடுத்து செல்லும் களுகங்கையின் பிரதான கிளைகளில் ஒன்றான குறுகங்கையிலிருந்தே போபத்எல்ல உருவாகின்றது.
கொழும்பு பிரதேசத்தை அண்டியுள்ள மிகவும் ரம்மியமான இந்நீர் வீழ்ச்சியை இரத்தினபுரி கொழும்பு நெடுஞ்சாலையில் ஹிக்கஸ்ஹேன கடைவீதியிலிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையிலிருந்து 4 கி.மீ தூரம் சென்றவுடன் தெவிப்பஹன எனும்இடத்தில் காணலாம்.
புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த போதிமரத்தின் இலை வடிவில் நீர் மேலிருந்து பாய்வதால் இந்நீர்வீழ்ச்சிக்கு போபத்எல்ல எனத் தோன்றிற்று. மலையின் ஒடுங்கிய பாகத்திலிருந்து நீர்
ஒடுங்கி அகன்று பாயும் போது அந்த இலை வடிவத்தை அவதானிக்க முடிகின்றது.
தலை நகரத்திலிருந்து கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் உல்லாசப்பயணிகள் மத்தியில் பிரதான தளமாக விளங்குகின்ற அதேவேளை பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகள் காரணம் காட்டி பெரும் எண்ணிக்கையிலான வருஞர்கள் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றதை கடந்த காலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அவதானிக்க முடிகின்றது.
இரத்தினர்புரி மாவட்டத்தின் அரச இலை தாங்கிய ஓர் ஓவியத்தைத் தரிசிக்கக்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. ஆனால் கிடைக்கப் பெற்ற சிறிது அனுபவம் எமக்கும் உண்டு.
எமது முன்னோர்கள் மன்னராட்சி காலத்திலிருந்து இயற்கையின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் அவற்றை பாதுகாக்கவும் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை வெகுவாகவே இப்பிரதேசத்தை
ஆக்கிரமித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூடவே பொலித்தீன் பைகளில் உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளையும் பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களையும் கண்ணாடி போத்தல்களில் மதுபானங்களையும்; கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் இத்தகைய கழிவுகள் அந்த நீர் நிலையிலும் அதனை அண்டிய சமதரையிலுமே வீசப்படுகின்றன.
அரிய உயிரினங்கள் விலங்குகளின் அரண்களாக காணப்படும் இப்பிரதேசத்தில் இத்தகைய நாசகார செயற்பாடுகளால் அதன் எழில் குறைந்து வருவதோடு உல்லாச பிரயாணிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைத்து விட்டது.
தரையில் விட்டுச் செல்லும் இத்தகைய கழிவுகளால் பல அப+ர்வ உயிரினங்களை காண முடிவதில்லை.அவை இத்தகைய சூழல் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது அருகிப் போய்விட்டதாக அவ்வூர்வாசி ஒருவர் கூறினார். மற்றும் நீர்வீழ்ச்சியின் உச்சத்துக்கு உல்லாசப் பயணிகள் செல்லும் போது பொலித்தீன் உறைகளுள் கடலை சொக்கிலேட் சுவிங்கம் என்பவற்றை கொண்டு செல்கின்றனா.; திரும்பும் போது அங்கேயே அவற்றை விட்டுச் செல்கின்றனர். பலமான காற்று வீசும் போது அவை நீருக்குள் காவு கொள்ளப்படுகின்றன. அவற்றை உட்கொள்ளும் போது மீன்கள் பறவைகள்
மற்றும் நீர் வாழ் தாவரங்கள் மரணித்து காலப்போக்கில் வாழ்ந்ததற்கான எவ்வித எச்சங்களோ மீதமிருக்காமல் போகின்றன.
இளைஞர்கள் குளுவாக அமர்ந்து போதைப் பொருட்களை பாவித்தவிட்டு கண்ணாடி போத்தல்களை அங்கேயே விட்டுச் செல்வதால் விபரம் தெரியாத அங்கு வரும் ஏனைய உல்லாசப் பயணிகள் உடல் காயங்களுக்கு உட்படுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் பெண்கள வருவதைத் தவிர்த்;து வருவதாக குருவிட்ட பிரதேசசபைத் தவிசாளர் குறிப்பிட்டார்.
பண்டைய காலத்தில் அரசர்களால் நீராடுவதற்;காக உபயோகிக்கப்பட்டிருப்பதை வரலாற்று ஆவணங்களின் ஊடாக உணர முடிகிறது. சமன்தெய்வம் தோன்றுவதாக நம்பப்பட்ட சமன் தேவாலயத்தைத் தரிசித்த பின்னர் இங்கு நீராட வருவதாக வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது
இந்நீர்;வீழ்ச்சி முதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை 1860 ஆம் ஆண்டளவில் குறுவிட்’ட எல்ல என அழைத்தனர். இந்நீர்வீழ்ச்சி சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து பிரவகிக்கின்றது. நீர் வீழ்ச்சிகளில் இன்று எஞ்சியுள்ளவை பிரதான ஆறுகளிலும் அதன் கிளைகளிலும் உருவாகும் நீர் வீழ்ச்சிகள் மாத்திரமேயாகும் இதனால் எமது புராதன சொத்தக்களில் ஒன்றான நீர்வீpழ்ச்சிகள் எதிர்கால சந்ததினருக்கு உரித்தாக்க பாதுகாத்தல் வேண்டும்.
இலங்கையின் கவர்ச்சிமிகு நான்கு நீர் வீழ்ச்சிகளை கௌரவிக்கும் விதத்தில் அஞ்சல் திணைக்களத்தின் முத்திரை வெளிய_ட்டு பணியகம் 25.65×41மி;.மீ அளவிலான நான்கு முத்திi ரகளை வெளியிட்டது இவற்றுள் போபத் எல்ல நீர் வீழ்ச்சியும் உள்ளடக்கப்பட்டமை இந்நீர் வீழ்ச்சியின் மகிமையை பிரஸ்தாவிப்பதாக உள்ளது. இவற்றை புலஸ்தி எதிறிவீர எனபவர் வடிவமைப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பும் பெருமையும் கொண்ட போபத் எல்லவின் பாதுகாப்பு யாரைச் சார்ந்தது?
இத்தகைய சூழல் அநீதி அனர்த்தங்கள் தொடருமானால் எழில் கொஞ்சும்; போபத் எல்லவின் இருப்பு கவர்ச்சிக்கு எந்தளவு உபயோகமாக இருக்கும் என்பது கேள்விக்குறியே !
களனி பல்கலைக் கழக மாணவர்களின் சிரமாதனச் செயற்பாடுகளைக் காட்டும் காணொளி
நல்ல விடயங்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.