Friday, March 25, 2022

நீண்டகால கடன்களை நிறைவேற்றும் உத்தி

 கடன்களை தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


உதாரணமாக சண்முகம் என்பவருக்கு நான்கு கடன்கள் உள்ளன என்று கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் - வட்டி விகிதம் 0% -ரூபாய் 10000

கடன் அட்டை கடன் - வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000

வாகன கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000

வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

கடன் பனிப்பந்து(debt snowball) முறை: இந்த முறைப்படி கடன்களை அவற்றின் தொகையின்படி வரிசைப்படுத்த வேண்டும். 2 கடன்களின் தொகை ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அதிக வட்டி விகிதம் உள்ளதை முதலில் செலுத்தி , குறைந்த வட்டி விகிதம் உள்ளதை பின்பு செலுத்தலாம். இது மனோதத்துவம் முறைப்படி சிறந்த ஒரு முறை. சிறிய கடன்களை செலுத்தி முடிக்கும்போது பெரிய கடன்களை செலுத்தும் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. இதனை அமெரிக்காவை சேர்ந்த பெரிய நிதி வல்லுனரான டேவ் ராம்சே (Dave Ramsey) பரிந்துரைக்கிறார். இந்த முறைப்படி சண்முகத்தின் கடனை பின்வருமாறு வரிசைப்படுத்த வேண்டும். வரிசையில் முதலாவதாக உள்ள கடனை அடைக்க வேண்டும்.

மற்ற கடன்களை அடைக்க தவணையை மட்டும் செலுத்த வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு சேமித்து முதல் கடனை அடைப்பதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும். முதல் கடனை அடைத்த பின்பு அடுத்ததாக இரண்டாவது கடனை முழு முயற்சியுடன் அடைக்கவேண்டும் இவ்வாறாக ஒவ்வொரு கடனையும் அடைத்து முடித்த பின்னர், நீங்கள் கடன் இல்லாத மனிதனாக நிம்மதியான மனிதனாக மாற முடியும். மறுபடியும் கடனில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

• நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் - வட்டி விகிதம் 0% -ரூபாய் 10000

• வாகன கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000

• கடன் அட்டை கடன் - வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000

• வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

கடன் பனிச்சரிவு(avalanche) முறை: இந்த முறையில் கடன்களை அவற்றின் வட்டி விகிதத்தின் படி வரிசைப்படுத்த வேண்டும். அதிக வட்டி உள்ள கடனை, நாம் அதிக பணம் தவணை செலுத்துகிறோம் அதிக பணம் விரயமாகிறது. எனவே இந்த முறையில் நாம் அதிக கடன் வட்டி விகிதம் உள்ள கடனை செலுத்துவதில் முதலில் கவனத்தை திருப்புகிறோம்.

இரண்டு கடன்களுக்கு ஒரே வட்டி விகிதம் இருக்கும் பட்சத்தில், குறைந்த கடன் தொகை உள்ளதை முதலில் செலுத்தி அதிக கடன் தொகை உள்ளது பின்பு செலுத்தலாம். ஆனால் இது மனோதத்துவ முறைப்படி நல்ல ஒரு திட்டம் அல்ல. அதிக வட்டி விகிதம் உள்ள கடன் பெரிய தொகையாக இருப்பின், என்ன நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேமித்து கூட நம்மால் கடனை அடைக்க முடியவில்லையே என்ற ஒரு மன சோர்வு ஏற்படலாம்.

ஆனால் இவ்வாறு மனச் சோர்வு அடைய மாட்டேன் என்று எண்ணுபவர்கள் இத்தகைய முறையை பின்பற்றலாம். இந்த முறைப்படி கடனை அடைப்பதற்காக செலவழிக்கும் பணம் கொஞ்சம் குறையும்.

இந்த முறைப்படி சண்முகத்தின் கடனை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

• கடன் அட்டை கடன் - வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000

• வாகன கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000

• வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

• நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் - வட்டி விகிதம் 0% -ரூபாய் 10000

மன உளைச்சலை (annoying) சார்ந்த கடன் செலுத்தும் முறை: கடன் அட்டை காரணமாக உங்களுக்கு பல்வேறு அழைப்புகள் கடன் அட்டை நிறுவனத்தில் இருந்து வந்து உங்களுக்கு பல மன உளைச்சலைக் கொடுக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் முதலில் அடைக்க நினைக்கலாம்.

அதனை அடைத்த பின்னர் உங்களுக்கு ஒரு மன நிம்மதி ஏற்படும். அல்லது நீங்கள் கைமாற்றாக கடன் வாங்கிய நபர் உங்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்யும் பட்சத்தில் அந்த கடனை நீங்கள் முதலில் அடைக்க நினைக்கலாம். இவ்வாறு மன உளைச்சல் அடிப்படையில் கடன்களை வரிசைப்படுத்தி அடைக்க நினைக்கலாம்.

உதாரணமாக சண்முகத்திற்கு கடன் அட்டை நிறுவனம் அதிக தொந்தரவும், கைமாற்றாக வாங்கிய நபர் குறைந்த தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில் அவற்றை முதலில் செலுத்தி விட்டு மற்ற கடன்களை தொகை படியோ அல்லது வட்டி விகிதம் படியோ வரிசைப்படுத்தி செலுத்தலாம்.

• கடன் அட்டை கடன் - வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000

• நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் - வட்டி விகிதம் 0% -ரூபாய் 10000

• வாகன கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000

• வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

என்னைப் பொறுத்தவரை, பனிப்பந்து முறையை கையாண்டு மிகவும் வெற்றி பெற்றுள்ளேன். மனோதத்துவ முறைப்படி குறைந்த கடன்களை அடைக்கும் போது, தன்னம்பிக்கையை அளித்து அதிக கடன் அடைப்பதற்கான உத்வேகத்தை அளித்தது கடன் இல்லாத மனிதனாக மாற்ற உதவுகிறது.

மானின் தீவிரம்((gazelle intensity):

கடன்களை அடைப்பதற்கு, எவ்வளவு அதிகம் சேமிக்க முடியுமோ சேமித்து எவ்வளவு சீக்கிரம் அடக்க முடியுமோ அடைத்து முடிக்க முயல வேண்டும். இதனை டேவ் ராம்சே அவர்கள் gazzelle intensity (மானின் தீவிரம்) என்று கூறுகிறார்கள். தன்னை துரத்தும் சிங்கத்திடம் இருந்து தப்பிக்க ஒரு மான் எவ்வாறு அதிகபட்ச வேகத்தில் ஓடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதோ, அவ்வளவு தீவிரமாக கடனில் மாட்டிக் கொண்ட மனிதன் முயன்று தன் கடனிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

கடன்களை அடைப்போம். கடன் இன்றி நிம்மதியாக வாழ்வோம். கடன் இல்லாத மனிதன் நிம்மதியான மனிதன் .

No comments:

Post a Comment